மகிழுந்துக்குள் தனியே விடப்பட்ட குழந்தை ஒன்று அதிக வெப்பம் காரணமாக பலியாகியுள்ளது.
திங்கட்கிழமை நண்பகல் Saint-Nazaire (Loire-Atlantique) நகரில் உள்ள Wilson Boulevard வளாகத்தின் தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்து ஒன்றின் பின் இருக்கையில் குழந்தை ஒன்று இருப்பதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர், மகிழுந்தின் கதவை உடைத்து குழந்தையை மீட்டெடுத்தனர். ஆனால் துரதிஷ்ட்ட குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை 28 செல்சியஸ் வெப்பத்துக்குள் பலமணிநேரம் சிக்குண்டு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வயது குழந்தை ஒன்றே இவ்வாறு பலியாகியுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குந்தையின் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.