இரஷ்யா நடத்திய தாக்குதலில் பிரெஞ்சு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகம் இத்தகவலை இன்று, ஜூன் 3, வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 'உக்ரைனில் இரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் பிரெஞ்சு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இரஷ்யா- உக்ரைன் யுத்தம் கடந்த 100 நாட்களுக்கு மேலாக இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது