நாளை ஜூன் 3 ஆம் திகதி Stade de France மைதானத்தில் இடம்பெற உள்ள பிரான்ஸ்-டென்மார்க் போட்டிகளுக்காக பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை Stade de France மைதானத்தில் இடம்பெற்ற சாம்பியன் லீன் போட்டியின் போது பலத்த வன்முறை வெடித்திருந்தமை வாசகர்கள் அறிந்தே. போலி நுழைவுச் சிட்டைகளை கொண்டு பலர் உள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், நாளை மீண்டும் அதே மைதானத்தில் இடம்பெற உள்ள போட்டியின் போது வன்முறைகள் எதுவும் இடம்பெறாமல் இருக்க 1,270 மெய்பாதுகாவலர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியுள்ள நிலையில், குழப்பங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.