கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் பிரான்ஸை ஆக்கிரமித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்திற்குட்பட்ட கொரோனா தொற்று தொடர்பான தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 50,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் தற்போது 7,019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 846 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 24 மணிநேரத்தில் 48 பேர் மருத்துவமனைகளில் மரணித்துள்ளனர். இதுவரை பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 148,996 பேர் மரணமடைந்துள்ளனர்.