இன்று ஜூன் 18 ஆம் திகதி சனிக்கிழமை நாட்டிலுள்ள 70 மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக பிரான்சில் மிக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த இரு நாட்களில் இவ்வருடத்தின் மிக அதிகபட்ச வெப்பம் பதிவாகியிருந்தது. இந்நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 42°C வெப்பம் அல்லது அதற்கும் மேல் பதிவாகும் எனவும் Météo France எச்சரித்துள்ளது.

மொத்தமாக 70 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 14 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டு ‘சிவப்பு’ (Rouge) நிற எச்சரிக்கையும், மீதமாக 56 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் (Orange) நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

harente(16) Charente-Maritime(17) Haute-Garonne(31) Gers(32) Gironde(33) Landes(40) Lot-et-Garonne(47) Pyrénées-Atlantiques(64) Hautes-Pyrénées(65) Deux-Sèvres(79) Tarn(81) Tarn-et-Garonne(82) Vendée(85) Vienna(86)
ஆகிய 14 மாவட்டங்களுக்கே சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.