கடும் வெப்பம் காரணமாக 37 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 மாவட்டங்களில் அதிகூடிய வெப்பம் நிலவும் என எச்சரிக்கப்பட்டு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளான Tarn, Haute-Garonne, Gers, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Landes, Gironde, Charente, Charente-Maritime, Deux-Sèvres, Vienne மற்றும் Vendée ஆகிய 12 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
Ardèche, Ariège, Aude, Aveyron, Cantal, Cher, Corrèze, Creuse, Dordogne, Drôme, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Loir-et-Cher, Haute-Loire, Loire-Atlantique, Lot, Maine-et-Loire, Mayenne, Morbihan, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Sarthe மற்றும் Haute-Vienne மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம், அனல்காற்று நிலவும் எனவும், இரவு நேரங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள், இணைப்பு நோய் தொற்று உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கும் படி பிரதமர் Elisabeth Borne எச்சரிக்கை விடுத்துள்ளார்.