நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு Lyon நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். லியோனின் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற வீதியான Sakharov இல் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

ஆயுததாரி ஒருவர் நடத்திய சரமாரியான துப்பாக்கிச்சூட்டில் 20 மற்றும் 16 வயதுடையவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் இருவரும் சிறுவர்கள் எனவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு இடம்பெற்றமைக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அப்பகுதி போதைப்பொருள் கடத்தல் காரர்களின் முக்கியமான சந்திப்பு பகுதி என காவல்துறையினர் தெரிவித்தனர்.