பரிசைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பரிசின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளன.
ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள், குப்பை வண்டி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாரத்தின் ஆரம்பம் முதல் இந்த வேலை நிறுத்தம் தொடர்வதால் வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து உள்ளன. கிட்டத்தட்ட 10 வட்டாரங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் 14 ஆம் வட்டாரத்தில் 300 தொன்னுக்கும் மேல் குப்பைகளும், 16 ஆம் வட்டாரத்தில் 200 தொன் எடைகொண்ட குப்பைகளும் குவிந்துள்ளதாக அறிய முடிகிறது.
தூய்மைப் பணியாளர்கள் சங்கத்துக்கும் பரிஸ் நகரசபைக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.