இன்று சனிக்கிழமை நாடு முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தலைநகர் பரிசில் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரிசில் உள்ள பல பூங்காக்கள், தோட்டங்கள் நள்ளிரவு வரை திறந்திருக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல் பரிசில் உள்ள நீச்சல் தடாகங்கள், குளியல் வசதிகள் போன்றவும் நள்ளிரவு வரை திறந்திருகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் நேரத்தை செலவிடும் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை செயற்கை நீரூற்று போன்றன நீண்ட நேரம் இயக்கப்படவுள்ளன.
மேலும், பொதுமக்கள் அவசர தேவையின் போது 3975 எனும் அவசர இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.