Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள அனைத்து தடுப்பூசி நிலையங்களும் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள அனைத்து தடுப்பூசி நிலையங்களூடாகவும் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். Seine-Saint-Denis மாவட்டத்தில் வசிப்போரில் பத்தில் ஏழு பேர் தங்களுக்கான தடுப்பூசியினை போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இங்குள்ள அனைத்து தடுப்பூசி மையங்களும் விரைவில் மூடப்பட உள்ளதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த தடுப்பூசி நிலையங்கள் மூடுவதற்குரிய ஆணை கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வார இறுதிக்குள் தடுப்பூசி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்சில் கொரோனா வைரசுக்கான முதல் தடுப்பூசி Sevran நகரில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையத்தில் போடப்பட்டிருந்தது. இங்குள்ள René-Muret மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தடுப்பூசி நிலையத்தில் வைத்து 78 வயதுடைய Mauricette எனும் பெண்ணுக்கு 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் 20 ஆம் திகதி அன்று தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.