நிலவறை ஒன்றுக்குள் இருந்து மூன்று குழந்தைகளின் சடலங்களை தாம் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Ville-d'Avray (Hauts-de-Seine) நகரில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இச்சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தடவியல் நிபுணர்கள் குழந்தைகளின் மாதிரிகளை சேகரித்துள்ளனர். முதல்கட்ட தகவல்களின் படி, குழந்தை பிறந்து சில நாட்களே இருக்கும் எனவும், குழந்தைகள் இறந்தும் சில நாட்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Ville-d'Avray நகரில் உள்ள முன்னாள் மகப்பேறு மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றின் நில அறை (Basement) இல் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. சடலங்களில் இரண்டு முற்றாக சிதிலமடைந்தும், ஒன்று பாதுகாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

உடற்கூறு பரிசோதனைகளின் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.