Neuilly-sur-Marne நகரை மையமாக கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வார ஆரம்பத்தில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றிருந்தது. Neuilly-sur-Marne (Seine-Saint-Denis) நகரை மையமாக கொண்ட நீண்டநாட்களாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்தனர். அதன் முடிவில் ஆறு பேர் கொண்ட ஒட்டுமொத்த குழுவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், 25 கிலோ கஞ்சாவும், €150,000 யூரோக்கள் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தோடு Audi A1 வகை ஆடம்பர மகிழுந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கைதான அனைவரும் 19 தொடக்கம் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.