Cannes சர்வதேச திரைப்பட விழா இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது பெண் ஒருவர் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் நேற்று மே 20, வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Cannes திரைப்படவிழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அரை நிர்வாண பெண் ஒருவர் இடையில் நுழைந்தார். அவரது உடலின் உக்ரைன் நாட்டு கொடியின் வர்ணம் பூசப்பட்டது. உக்ரைனிய பெண்களை இரஷ்ய இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாகவும் அதை நிறுத்தும்படியும் அவர் கோஷமிட்டார்.
உள்ளாடையில் இரத்தம் போன்று மை பூசியிருந்த அவர் உடலில் ‘STOP Raping us’ (எங்களை பாலியல் பலாத்காரம் செய்வதை நிறுத்துங்கள்!) என எழுதியிருந்தார்.
உக்ரைனிய பெண்கள் பலரை இரஷ்ய இராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky அண்மையில் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது