ஐந்து நாட்களுக்கு முன்பு பிரதமராக நியமிக்கப்பட்ட எலிசபெத் போர்னின் புதிய அமைச்சரவையின் விவரம் இன்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டுள்ளது.27உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவையில் 14 ஆண்களும் 13 பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.பெண் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில்
பெண் ஒருவரே வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ஜீன் காஸ்ரோவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் புரூனோ லு மேயர் (Bruno Le Maire), உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா (Gérald Darmanin) நீதி அமைச்சர் எரிக்-டுப்பொன்ட் மொரேட்டி
(Eric-Dupond Moretti) ஆகிய மூவர் மட்டுமே தொடர்ந்தும் புதிய அமைச்சரவையிலும்
அதே அமைச்சுப் பொறுப்புகளுடன் இடம்பிடித்துள்ளனர்.
முக்கியமாக நாட்டின் ஆயுதப்படைகள், வெளிவிவகாரம் ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுப் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான
அமைச்சராக விளங்கிய செபாஸ்ரின் லெகோர்னு(Sébastien Lecornu) ஆயுதப்படைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
வெளிவிவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சராக கத்தரின் கொலோனா (Catherine Colonna)
பொறுப்பேற்றிருக்கிறார்.இங்கிலாந்து
இத்தாலி நாடுகளுக்கான பிரான்ஸின்
தூதராகப் பணிபுரிந்த கத்தரின் கொலோனா ராஜதந்திர சேவையில் நீண்டகால அனுபவம் உள்ளவர்.
அமைச்சரவையின் முழு விவரம்
வருமாறு :
🔵Bruno Le Maire- Minister of Economy, Finance and Industrial and Digital Sovereignty
🔵Gérald Darmanin- Minister of the Interior
Catherine Colonna, Minister for Europe and Foreign Affairs
🔵Eric-Dupond Moretti- Minister of Justice
🔵Amélie de Montchalin, Minister for Ecological Transition and Territorial Cohesion
🔵Pap Ndiaye, Minister of National Education and Youth
🔵Sébastien Lecornu, Minister for the Armed Forces
🔵Brigitte Bourguignon, Minister of Health and Prevention
🔵Olivier Dussopt, Minister of Labour, Full Employment and Integration
🔵Damien Abad, Minister of Solidarity, Autonomy and People with Disabilities
🔵Sylvie Retailleau, Minister of Higher Education and Research
🔵Marc Fesneau, Minister of Agriculture and Food Sovereignty
🔵Stanislas Guerini, Minister of Public Service
🔵Yaël Braun-Pivet, Minister of Overseas
🔵Rima Abdul Malak, Minister of Culture
🔵Agnès Pannier-Runacher, Minister for Energy Transition
🔵Amélie Oudéa-Castéra, Minister of Sports and the Olympic and Paralympic Games.