கடந்த 24ம் திகதி பெப்ரவரி மாதம் முதல் ரஸ்ய உக்ரைன் யுத்தம் ஆரம்பித்த நாளிலிருந்து, ரஸ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையிலான பேச்சுவாத்தையிலும் உக்ரைனிற்கான உதவிகளிலும் பிரானஸ் முக்கியத்துவம் வகித்து வருகின்றது.

 
நேட்டோ படைகளிற்காக ருமேனியாவில் 800 பிரெஞ்சுப் படையினர் இறக்கப்பட்டு;ள நிலையிலும், எமானுவல் மக்ரோன் மீண்டும் பதவிக்கு வந்துள்ள நிலையிலும், பிரான்ஸ் ரஸ்யாவுடனான யுத்தத்தில் நேரடியாகக் களமிறங்கி விடு;ம் என்ற அச்சம் பிரெஞ்சு மக்களிடம் ஏற்பட்டு;ள்ளது.
 
புள்ளி விபர நிறுவனமான CSA செய்த கருத்துக் கணிப்பில் 10 இற்கு 7 பேர் அதாவது 72 சதவீதமானோர் பிரான்ஸ் ரஸ்யாவுடனான யுத்தத்தில் பிரான்ஸ் நேரடியாகக் களமிறங்கும் ஆபத்து உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்