பிரான்ஸ்: Bas-Rin இல் பாராசூட்டில் இருந்து தவறி விழுந்து ஒரு பெண் போலீஸ் இறந்தார்! 2022 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை, ஸ்ட்ராஸ்பேர்க்கில் (பாஸ்-ரின்) பாராசூட் ஜம்ப் ஒன்றின் போது 1,000 மீட்டர் உயரத்தில் விழுந்து 24 வயது போலீஸ் பெண் இறந்தார்.

மே 6, இரவு 8:40 மணியளவில் இந்த பயங்கரமான சோகம் நிகழ்ந்தது என்று பாஸ்-ரினின் துறைசார் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (SDIS) செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடமாக ஸ்கை டைவிங் பயிற்சி செய்து நூற்றுக்கும் மேற்பட்ட தாவல்களை மேற்கொண்ட இளம் பெண்ணிற்கே விபத்து நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இருந்த மற்ற பத்து பேருக்கும் உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இந்த பயங்கரமான சோகத்தால் “அதிர்ச்சியடைந்துள்ளனர்” என்று தெரிய வந்ததுள்ளது.