இன்று மே 9, திங்கட்கிழமை நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீச உள்ளதாக பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோடைகாலத்தில் நிலவுவது போன்ற வெப்பநிலையை பிரான்ஸ் இந்த நாட்களில் சந்திக்க உள்ளது. நாடு முழுவதும் அதிகபட்சமாக 30°C வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்சில் தென்கிழக்கு பிராந்தியங்களிலும், Nord மாவட்டத்திலும் அதிகூடிய வெப்பம் பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கும் இந்த வெப்பம் வரும் வெள்ளிக்கிழமைவரை நீடிக்கும் என Météo France அறிவித்துள்ளது.
பரிஸ்?
தலைநகர் பரிசில் அதிகபட்சமாக 28°C வெப்பம் நிலவும் என எதிர்ப்பார்கப்பட்டுள்ளது. பரவலாக பரிஸ் முழுவதும் இந்த வெப்பநிலை பதிவாகும் எனவும், இரவு நேரத்தில் 20°C வரையான வெப்பநிலை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.