பிரான்ஸ்: துலூஸில் சிறார்களுக்கு முன்பாக ஆபாச காட்சிகளை காட்சிப்படுத்தியதற்காக CNED இயக்குனர் கைது செய்யப்பட்டார்! Cned இன் Toulouse தளத்தின் இயக்குனர் (தேசிய தொலைதூரக் கல்வி மையம்) இந்த சனிக்கிழமை, மே 7 அன்று குழந்தைகள் முன்னிலையில் ஆபாச காட்சியை காட்சிப்படுத்தியதற்காக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
குழந்தைகள் பங்கேற்ற ஒரு கால்பந்து போட்டியின் ஓரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் பெற்றோரால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட அவர், பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரின் இந்த மோசமான செயலின் காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் நபரின் இந்த செயல் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக உள்ளது.