சிறைக்கைதி ஒருவர் மிருகக்காட்சி சாலையை பார்வையிடச் சென்றதை சாதகமாக பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளான் .
இச்சம்பவம் மே 3, நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Drôme நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Valence சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகள் சிலரை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதன்போது கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளான்.
கழிவறைக்கு செல்வதாக சொல்லிவிட்டுச் சென்ற கைதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
உடனடியாக தகவல் பகிரப்பட்டு, உலங்கு வானூர்தி மூலம் அப்பகுதி முழுவதும் தேடப்பட்டது. ஆனால் கைதி சிக்கவில்லை. தப்பி ஓடியுள்ள கைதி 15 வரையான குற்றச்செயல்களின் தொடர்புடைய மிக ஆபத்தானவன் எனவும், கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து அவன் சிறைவைக்கப்பட்டிருந்தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.