பிரெஞ்ச் வாழிட உரிமை அட்டை கோரி செய்யப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் டிஜிட்டல் மயமாக்கபடுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிவாக்கில் பிரஞ்ச் வாழிட உரிமை கோரி செய்யப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக செய்யப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.


 
ஆனால் இந்த மாற்றம் எல்லா வகை வாழிட விண்ணப்பங்களுக்கும் பொருந்துமா என்பது தெளிவாக தெரியவில்லை. வாழிட உரிமைகளுக்காக மக்கள் அலைவதை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் ஒரே ஒரு முறை மட்டுமே மக்களின் வசதிக்காக அலுவலகத்துக்கு செல்ல நேரிடும் அதாவது தயாராக உள்ள உரிமையை பெற்றுக் கொள்வதற்காக,அல்லது ஒரு வேளை விண்ணப்பதாரர் தனது கைரேகைகளை பதிவு செய்யாமல் விட்டிருந்தால் இரண்டு முறை செய்ய செல்ல நேரிடலாம். அத்துடன் தேவையான ஆவணங்கள் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.