இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று உரையாடினார்.

இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த உரையாடல் 2 மணிநேரங்களும் 10 நிமிடங்களும் நீடித்ததாக எலிசே (ஜனாதிபதி மாளிகை) வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் போது, உக்ரைனில் யுத்தப்பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ள மக்களை வெளியேற அனுமதி அளிக்கும் படி மக்ரோன் கோரிக்கை வைத்தார்.குறிப்பாக, உக்ரைனின் இரும்பு உற்பத்தி தொழிற்சாலையான Azovstal -இனை இரஷ்ய துருப்புக்கள் முற்றுகையிட்டுள்ளன. இங்கு பல நூற்றுக்கணக்கான உக்ரைனிய மக்கள் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், இந்த ஆலை மீது தாக்குதல் நடத்தினால் மிக மோசமான உயிர்ச்சேதம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தாக்குதலை நிறுத்தி மக்களை வெளியேற அவகாசம் அளிக்க வேண்டும் என மக்ரோன் கேட்டுக்கொண்டர்