RATP நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து மற்றும் ட்ராம் ஊழியர்கள் மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வரும் 23, 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. RATP நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்து மற்றும் ட்ராம் சாரதிகள் மற்றும் தொழிழ்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட 18,000 பேர் இந்த பணி நிறுத்தத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அவர்க்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகிறது.