உணவுகளுக்காக வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க ஸ்வைன் வைரஸ் (African swine flu) எனும் காய்ச்சல் பரவுவதால் பிரான்சில் பன்றி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
பிரான்சில் இதுவரை இந்த வைரஸ் பரவவில்லை என்றபோதும், ஜெர்மனியில் பிரான்சின் எல்லை நகரமான Forchheim பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. பிரான்சின் எல்லையில் இருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள இந்த பண்ணையில் இது வரை 35 பன்றிகள் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து பன்றிகள் பிரான்சுக்கு கொண்டுவர தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் பன்றி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரெஞ்சு பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு இந்த ஸ்வைன் வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்வைன் வைரஸ் பன்றிகளுக்கு ஏற்பட்டால் அதனை காப்பாற்ற முடியாது எனவும், சக பன்றிகளை காப்பாற்றும் நோக்கில் உடனடியாக குறித்த பன்றிகளை பலியிட நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.