தொடருந்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று மே 25, புதன்கிழமை இச்சம்பவம் Montpellier நகரில் இடம்பெற்றுள்ளது. Intercités தொடருந்து ஒன்று Bordeaux-Marseille நகரங்களிடையே பயணித்துக்கொண்டிருக்கும் போது, அதில் பயணித்த பயணி ஒருவர் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார். தொடருந்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர் தொடருந்தில் பயணித்த பயணிகளுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

ஐபோனில் உள்ள AirDrop வசதியை பயன்படுத்தி இந்த தகவலை அவர் தொடருந்துக்குள் பரப்பியுள்ளார்.

அதையடுத்து தொடருந்துக்குள் பரபரப்பு எற்பட்டது. அதையடுத்து குறித்த தொடருந்து நிறுத்தப்பட்டு அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். அத்தோடு Montpellier தொடருந்து நிலையத்தில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

காவல்துறையினர் ஒட்டுமொத்த தொடருந்தையும் சோதனையிட்டனர். அதன் முடிவில் எந்த வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை.

இந்த போலியான தகவலை பரப்பிய பயணியை காவல்துறையினர் கைது செய்தனர்.