லண்டனில் சுரங்க ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஈழ தமிழர் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.சிவாகர் என்ற 41 வயது நபரே கடந்தாண்டு நவம்பர் மாதம் சுரங்க ரயில் முன் பாய்ந்து உயிரிழந்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளித்த ரயில் சாரதி,குறித்த நபர் வேண்டுமென்றே ரயில் முன் ஓடி வந்து பாய்ந்துள்ளதாக தெரிவித்தார்.ப்ளாட்போர்மில் சரியாக காத்திருந்து சரியான நேரத்தில் பாய்ந்துள்ளதாகவும் தான் ரயிலை நிறுத்த முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் உயிரிழந்த ஈழ தமிழர் உடலில் தற்கொலையை தூண்ட கூடிய சில மருத்துவ பதார்த்தங்கள் காணப்பட்டுள்ளதாக உடல்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடதக்கது.மேலும் இவரின் குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கையில் குறித்த நபர் ஆரோக்கியமாக,எந்தவொரு பிரச்சினை மன அழுத்தமும் இல்லாமல் இருந்ததாக தெரிவித்தனர்.

பண பிரச்சினையோ குடும்ப சிக்கல்களோ இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் என்று கூறியுள்ளனர்.விசாரணைகள் முடிவில் தற்கொலை என்றே உறுதியாகும் வாய்ப்பு உள்ளதாக உள்ளக தகவல்கள் நெரிவிக்கின்றன.