Vitry-sur-Seine, Val-de-Marne நகரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தை அடுத்து மூவரது சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தது. தீயணைப்பு படையினர் பேராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் துரதிஷ்ட்டவசமாக வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட மூவர் உடல்கருகி பலியாகியிருந்தனர். தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் என மூவர் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவத்தின் முடிவில் பலியான குடும்பத்தின் தலைவர் (வயது 54) கைது செய்யப்பட்டார். அவருக்கு பழைய பொருட்களை வீட்டில் சேகரித்து வைக்கும் மன நோய் இருப்பதாகவும், இந்த பொருட்களினாலே தீ பரவியதாகவும் முதல்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.