நேற்று நாடு முழுவதும் இடம்பெற்ற மே தின பேரணியில் 116,500 பேர் கலந்துகொண்டனர். (CGT தொழிற்சங்கம் தரப்பில் தாம் 210,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்)

இதில் பரிசில் 21,000 பேர் கலந்துகொண்டனர். Marseille நகரில் 3,600 பேர் கலந்துகொண்டனர். மேலும், Toulouse : 3,500
Lyon : 4,000
Strasbourg :1,500
Lille : 2,000
பேர் கலந்துகொண்டனர்.

பரிசில் பேரணியின் போது பலத்த வன்முறை வெடித்தது. காவல்துறையினர் மீதும், தீயணைப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 காவல்துறையினரும் இரு தீயணைப்பு படையினரும் காயமடைந்துள்ளனர்.

இதன்முடிவில் 54 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார். இவர்கள் தீயணைப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய பெண் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.