மே தினத்தன்று நடைபாதைகளில் ஒரு லில்லி மலர்க் கொத்தை வாங்கித் தங்களைத் தாங்களே உபசரித்துக் கொள்வது பிரெஞ்சு மக்களின் பாரம்
பரியம். லில்லி மலருக்கும் மே தினத்
துக்கும் இந்த சம்பந்தம் எப்படி வந்தது என்பது தெரியாது.
16 ஆம் நூற்றாண்டில் காதலர் தினம் பெப்ரவரி 14அல்ல. மே முதல் திகதியே
காதலர் தினமாக இருந்தது. அத்தினத்
தில் ஆண்கள், குறிப்பாக மணமகன்கள்
இளவரசர்கள், பிரபுக்கள் பெண்களுக்கு
மலர் கீரீடங்களைச் சூட்டுவது வழக்கம்
என்றும் அதன் வழி வந்ததே இந்த லில்லி
மலர்ப் பாரம்பரியம் என்று ஒரு தகவல்
சொல்கிறது.1560 இல் சார்ள்ஸ் மன்னரே
(King Charles IX) லில்லிப் பள்ளத் தாக்கு
மலர்களைப் பெண்களுக்குச் சூட்டும்
வழக்கத்தைத்தொடக்கி வைத்தார் என்ற
தகவலும் உண்டு.
1889 இல் உலக சோசலிஸக் காங்கிரஸ்
மே முதல் திகதியைத் தொழிலாளர் தின
மாகப் பிரகடனம் செய்த சமயத்தில் நடை
பெற்ற பேரணியில் தொழிலாளர்கள்
லில்லி மலர்களுடன் அணிவகுத்தனர்
என்பதால் சோசலிஸ்ட் அடையாளங்க
ளில் ஒன்றாக இருந்த சிவப்பு ரோஜா
மலருக்குப் பதிலாக லில்லிப் பூக்கள்
தொழிலாளரது அடையாளமாக மாறியது
என்ற ஒரு தகவலும் பகிரப்பட்டுவருகி
றது. எதுவானாலும் மே ஒன்று லில்லி
மலர்களுக்குக் கொண்டாட்டமே.
பாரிஸ் நகரத் தெருக்களில் இன்று காலை பூ விற்பவர்களையும் வாங்கிச்
செல்பவர்களையும் காணமுடிகிறது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு
களில் காணக் கிடைக்காத லில்லி மலர்
கள் விற்பனை இம்முறை சூடு பிடித்தா
லும் பணவீக்கம் அதன் விலையையும் உயர்த்தியிருக்கிறது.ஒன்று ,இரண்டு
ஈரோக்களாக இருந்த சிறு கொத்து மூன்று ஈரோக்களை எட்டியுள்ளது.
பாரிஸ் போன்ற நகரங்களில் நடை
பாதைகளில் பொருள்களை விற்
பதைப் பொலீஸார் தடைசெய்திருந்தா
லும் மே நாளில் விரும்பிய எவருமே லில்லிப் பூக்களை விற்பதற்கு அனுமதி
யுண்டு. சில விதிகள் இருந்தாலும் பெரிய கட்டுப்பாடு எதுவும் கிடையாது. வீஸா இல்லாத பல வெளிநாட்டுக் குடி
யேறிகளும் இந்த ஒரு நாள் பூங்கொத்து வியாபாரத்தில் உழைப்பதைத் தொழிலா
ளர் நாள் அனுமதிக்கிறது.
பொதுவாக வசந்த காலத்தை அண்டி
மொட்டு விட்டுப் பூக்கும் லில்லியை
பிரெஞ்சு மொழியில் "le brin de muguet"
எனப்"பள்ளத்தாக்கின் மலர்" என்ற அர்த்
தத்தில் அழைக்கிறார்கள். மணி போன்ற
வடிவம் கொண்ட சிறிய வெண்ணிற
மலர்களை வாங்குவோர் ஒரு கொத்தில் 13 பூக்கள் இருந்தால் அது தங்களுக்கு ஓர் அதிர்ஷ்டம் என்றும் நம்புகின்றனர்.
லில்லி மலர்களின் இந்த மே முதல் நாள்
கொண்டாட்டத்தை பருவநிலை மாற்றம்
இனியும் தொடர இடமளிக்குமா என்ற
கேள்வி இப்போது எழுந்துள்ளது. வழமை
யாக மே நாளை அண்டி அறுவடைசெய்
கின்ற நிலையில் பூக்கள் இருப்பது வழக்
கம். இந்த முறை அதற்குச் சில வாரங்கள்
முந்தியே பூக்கள் பூத்து மணம் பரப்பத்
தொடங்கிவிட்டன. பிரான்ஸில் அதிகளவு
லில்லி விளைகின்ற Loire-Atlantique பிராந்
தியத்தில் நேரகாலத்துடன் அறுவடை செய்யப்பட்ட பூக்களைக் குளிரூட்டிகளில்
வைத்துப் பாதுகாத்தே மே நாளில் விற்
பனை செய்யவேண்டிய நிலைமை ஏற்
பட்டிருக்கிறது. இம்முறை மார்ச் மாதத்
தில் அதிகரித்த வெப்பமும் மழை வீழ்ச்சி
யும் லில்லி மலர்வுகளை விரைவுபடுத்தி
விட்டன. காலம் தவறிய கோலங்கள் பூந்
தோட்டங்களில் அவதானிக்கப்பட்டன.
பூக்களைக் கருக விடாது காத்து வைத்து
பேணும் செலவும் பற்றாக்குறையும் லில்லி விலைகளில் அதிகரிப்பைச் செய்ய நிர்ப்பந்தித்துவிட்டன என்று பெரிய பூக்கடைக்காரர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மனித பண்பாடு, பாரம்பரியங்களின் சில சிறப்பு அம்சங்களைப் பருவநிலை மாறு
தல் காலப்போக்கில் இல்லாது ஒழித்து
விடக் கூடும் என்பதை லில்லி மலர்க
ளின் இன்றைய செய்தி உணர்த்துகிறது.