இம்முறை ஜனாதிபதி தேர்தலின் முதற்சுற்று வாக்கெடுப்புக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இம்மானுவல் மக்ரோன் மற்றும் Marine Le Pen ஆகியோருக்கிடையே போட்டி கடுமையாகியுள்ளது.
முதல் சுற்று!
இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியான கருத்துக்கணிப்பு ஒன்றின் முடிவுகளில், நடப்பு ஜனாதிபதியாக உள்ள இம்மானுவல் மக்ரோன் 27% வீத வாக்குகளையும், Marine Le Pen, 21% வீத வாக்குகளையும் முதல் சுற்றில் பெற்றுக்கொள்வார்கள் என தெரியவந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் Marine Le Pen, 18% வீத வாக்குகளை பெறுவார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வாக்குவீதம் அதிகரித்து மக்ரோனை நெருங்கி வந்துள்ளார்.
இரண்டாம் சுற்று!
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிலும் இருவருக்குமிடையிலான போட்டி மிக நெருக்கமாகவே உள்ளது.
இம்மானுவல் மக்ரோன் 54% வீத வாக்குகளையும், Marine Le Pen 46% வீத வாக்குகளையும் பெறுவார்கள் என தெரியவந்துள்ளது.
*இந்த கருத்துக்கணிப்பு Barometer நிறுவனத்தினால் 18 வயதுக்கு மேற்பட்ட 1,044 பேரிடம் மார்ச் 30, 31 ஆகிய திகதிகளில் மேற்கொள்லப்பட்டிருந்தது