அதிகளவான கைதிகளினால் பிரெஞ்சு சிறைச்சாலைகள் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளன.
தற்போது பிரான்சில் உள்ள 188 சிறைச்சாலைகளில் மொத்தமாக 70,246 கைதிகள் (*மார்ச் 1, 2022 திகதி வெளியான அறிக்கையின் படி) சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 60,619 கைதிகளுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளன. கைதிகளின் எண்ணிக்கை 116% வீதமாக அதிகரித்துள்ளதால் தற்போது சிறைச்சாலைகளில் நெருக்கடி எழுந்துள்ளது.
முன்னதாக, கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா வைரஸ் காரணமாக கைதிகளின் எண்ணிக்கை வருகை வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 5,841 கைதிகள் புதிதாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதனால் போதிய இடவசதி, கட்டில்கள் இல்லாமல் சிறைச்சாலைகள் நெருக்கடியை சந்தித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.