இம்முறைக்கான ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி இடம்பெற உள்ளது. இதில் இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென் ஆகிய இருவரும் மோதுகின்றனர்.
முதற் சுற்று வாக்கெடுப்பு நிறைவடைந்த சில நிமிடங்களிலேயே இரண்டாம் சுற்று குறித்த கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சற்று முன்னர் வெளியாக புத்தம் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றின் படி, இரண்டாம் சுற்றில் இம்மானுவல் மக்ரோன் 28.1% வீத வாக்குகளையும், மரீன் லூ பென் 24.1% வீத வாக்குகளையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் இம்மானுவல் மக்ரோனே ஜனாதிபதியாக வருவார் என கருத்துக்கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.
இன்று, முதற்சுற்று வாக்கெடுப்பின் முடிவில் சக ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் மக்ரோனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற நிகழ்வுகளே பதிவாகியிருந்தன. இரண்டம் சுற்றில் மக்ரோன் மற்றும் மரீன் லூ பென் ஆகிய இருவரும் மோதி, மக்ரோன் வெற்றி பெற்று ஜனாதிபதியானமை குறிப்பிடத்தக்கது