Saint-Rapaël பிராந்தியத்திலுள்ள கடற்கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு யுவதிகளை அந்த பகுதியில் இருந்த மூன்று சிறுவர்கள் கொடூரமான முறையில் கேலி செய்தனர் இதனால் ஆத்திரமடைந்த பெண் குறித்த சிறுவர்களில் ஒருவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று மதியம் Saint-Raphaël இல் உள்ள Veillat கடற்கரையில் சூரிய குளியலின் ஈடுபட்டுக்கொண்டிருந்த 16 வயதுடைய இளம் யுவதிகள் மீது குறித்த கடற்கரையில் உலாவிக்கொண்டிருந்த பதின்நான்கு வயதுடைய மூன்று சிறார்கள் கற்களை எறிந்து தாக்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த குறித்த டீன் ஏஜ் பெண்களில் ஒருவர் தன்னை தாக்குபவர்களுக்கு பதிலடி கொடுக்க நினைத்து சிறுவர்களில் ஒருவனின் கழுத்தை நெரித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் இரு தரப்பினரும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர் மேலும் கழுத்து நெரிக்கப்பட்ட போதிலும் சிறுவனுக்கு பெரியளவிலான மருத்துவ சேதங்கள் ஒன்றும் இல்லையென போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையில் ஈடுபட்ட அனைவறையும் கைது செய்த மாநகர காவல் துறையினர் அவர்களை Fréjus இல் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.