பரிசில் உள்ள செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய அகதிச் சிறுவன் ஒருவர் மீது பாலியல் சீண்டல் மேற்கொண்டதாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
சென்ற வாரம் உக்ரைனில் இருந்து அகதியாக பிரான்சை வந்தடைந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன் மீதே பாலியல் சீண்டல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் கடந்த புதன்கிழமை Gare du Nord தொடருந்து நிலையத்துக்கு வருகை தந்துள்ளான். ‘ஜெர்மனியில் இருக்கும் தனது தந்தையிடம் செல்ல - பயணச்சிட்டை முன்பதிவு செய்ய’ வந்துள்ளதாக அவன் குறிப்பிட்டுள்ளான். அப்போது அவன் குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள அங்கு பணிபுரியும் செஞ்சிலுசைச் சங்க ஊழியர் ஒருவர் சிறிவனை தனி அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அறைக்குள் அவைத்து சிறுவனை சோதனையிட்டுள்ளார். அத்தோடு பிரெஞ்சு மொழி பேச முடியாத அச்சிறுவனை பாலியல் சீண்டலும் செய்துள்ளார்.
அப்போது மற்றுமொரு செஞ்சிலுவைச் சங்க ஊழியர் அறைக்குள் நுழைந்த, இந்த காட்சியை பார்த்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடருந்து நிலையத்திலேயே நின்றிருந்த காவல்துறையினர் உடனைடியாக 25 வயதுடைய குறித்த நபரைக் கைது செய்தனர்.
பின்னர், அன்று மாலை குறித்த நபர் பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.