அரசியல் பின்னணி ஒன்றை உருவாக்குவதில் மக்ரோன் தோல்வியடைந்துள்ளார் என முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து தெரிவித்துள்ளார்.

பிரான்சுவா ஒலோந்து (François Hollande) இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச ஊடகமான CNN இற்கு பேட்டி வழங்கியிருந்தார். அதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். “ஐந்து வருடங்களின் பின்னர், இம்மானுவல் மக்ரோன் சில அனுபவங்களை பெற்றிருப்பார். ஆனால் அவருக்கு அடுத்ததாக இயங்குவதற்கு அவர் ஒருவரையும் உருவாக்கவில்லை. அடுத்த ஐந்தாண்டு காலத்துடன் மக்ரோனின் அரசியல் சரிகிறது. இந்த விடயத்தில் மக்ரோன் தோல்வியடைந்துள்ளார்!” என பிரான்சுவா ஒலோந்து குறிப்பிட்டுள்ளார்