இவ்வருடத்தின் முதல் காலண்டில் பிரான்ஸ் பொருளாதார ரீதியாக எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
INSEE நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் நான்கு மாதத்தில் பிரான்சின் உள்நாட்டு உற்பத்தியில் (GDP)எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதற்கு பின்னணியில் இரஷ்யா-உக்ரைன் யுத்தம் ஒரு காரணமாக உள்ளது என INSEE நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த யுத்தத்தினால் பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பிரெஞ்சு மக்களின் வீட்டு நுகர்வில் (la consommation des ménages) பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்ற ஆண்டின் நான்காவது காலாண்டில் பிரான்ஸ் 0.8% வீத பொருளாதார வளர்ச்சியினைஅடைந்திருந்தது. அதையடுத்து இந்த காலாண்டில் 0.3% வீத வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் எவ்வித வளர்ச்சியினையும் (0%) பிரான்ஸ் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.