Normandie: Cherbourgல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து கடந்த சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அவ்விபத்தில் 4 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் அக்குழந்தைகளின் பெற்றோர் தீயில் சிக்கியிருந்தனர். தீயணைப்பு வீரர்களால் தம்பதியினர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகளில் ஒருவருக்கு தீவிர கார்டியோ சுவாசச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அவர் இறந்துவிட்டதாக SMUR மருத்துவரால் அறிவிக்கப்பட்டது, மேலும் 2வது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று Manche Fire and Rescue Service (SDIS 50) தெரிவித்துள்ளது.
மேலும் இத்தீவிபத்து குறித்து காவல்துறை மற்றும் தீ நிபுணத்துவம் விசாரணைக்கு வேண்டிய அனைத்து முன்பதிவுகளுடன் விசாரணையை ஆரம்பித்தனர். இந்த தீ விபத்து தற்செயலான காரணத்தால் ஏற்பட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.