பிரான்ஸ்: Escherichia coli மூலம் குழந்தைகளின் உடல் நலன் பாதிப்பு வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும்பாலும் பியூடோனி பிராண்டின் Fraich’Up பீஸ்ஸாக்களை பயன்படுத்திய நுகர்வோர் கடந்த வெள்ளிக்கிழமை Bordeaux வழக்கறிஞர் அலுவலகத்தில் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் இச்சம்பவத்தில் தனது இரு குழந்தைகளையும் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோரால் இப்புகார் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கும் உண்மையில் Escherichia coli மூலம் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசுத் தரப்பு விளக்குகிறது.
பிரான்ஸின் செய்தித்தொடர்பு தகவலின்படி, இந்நிறுவத்திற்கு எதிராக மொத்தம் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இதில் பெரும்பாலான புகார்கள் குழந்தைகளின் பெற்றோர்களால் தாக்கல் செய்யபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.மேலும் தமிழர்களிடையே இது தொடர்பான எச்சரிக்கை பல பிரான்ஸ் வாழ் ஊடகவியலாளர்கள்,சமூக ஆர்வலர்கள் மூலம் விடப்பட்டிருக்கின்றது,இருப்பினும் மக்கள் மத்தியில் அசன்டையீனமே மிகுதியாக காணப்படுகின்றது.