நாளை மே தின ஊர்வலம் இடம்பெற உள்ள நிலையில், பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.
பல்வேறு தொழிற்சங்கங்கள், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பரிசில் 25,000 பேர் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய முடிகிறது. Place de la République இல் பகல் 2 மணிக்கு ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்டம் Place de la Nation பகுதியில் சென்று நிறைவடைய உள்ளது.
அதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக பல மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளன.
Champs-Élysées-Clémenceau மெற்றோ நிலையம் காலை 10 மணி முதல் மூடப்படுகிறது.
மேலும்,
Nation (M1, M2, M6, RER A)
· Temple (M3)
· Oberkampf (M5, M9)
· Saint-Ambroise (M9)
· Voltaire (M9)
· Charonne (M9)
· Rue des Boulets (M9)
· Richard Lenoir (M5)
· Bréguet-Sabin (M5)
· Daughters of Calvary (M8)
· Parmentier (M3)
· Rue Saint Maur (M3)
ஆகிய நிலையங்கள் பகல் 2 மணி முதல் மூடப்படுகிறது.