பிரான்ஸில் ஆகக் குறைந்த அடிப்படைச்
சம்பளம் மே முதலாம் திகதி தொடக்கம்
34 ஈரோக்களால் சிறிய அதிகரிப்பைப்
பெறுகிறது. அது அரசு வழங்கும் ஊதிய
உயர்வு அல்ல.ஆண்டு தோறும் இயல்
பாகச் செய்யப்படுகின்ற(Augmentation automatique du Smic) அதிகரிப்பே ஆகும்.

இதன்படி மே முதல் அடிப்படைச் சம்பளம்
1,300 ஈரோக்களைத் தாண்டி 1.302,64 ஈரோக்களாக அதிகரிக்கிறது. இது ஒருவருக்கு கையில் கிடைக்கின்ற(Net)
தொகை ஆகும். மொத்தமாகத் திரட்டிய சம்பளத் தொகை (brut)1.645,58 ஈரோக்
களாக இருக்கும்.

அதேசமயம் குடும்ப உதவியாக les Caisses des allocations familiales  நிறுவனத்
தினால் வழங்கப்படுகின்ற உதவிகள்
மே மாதம் முதல் 1,8%வீதத்தால் அதிகரிக்
கப்படுகின்றன.revenu de solidarité active (RSA), les allocations familiales, l'allocation de base pour jeunes enfants, la prestation partagée d'éducation de l'enfant (PreParE), l'allocation de rentrée scolaire, le complément de mode de garde, la prime d'activité ஆகிய
கொடுப்பனவுகள் இந்த அதிகரிப்பினுள்
அடங்கும்.

வளர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்தக் கொடுப்ப
னவும்(Le relèvement de l'Allocation adulte handicapée - AAH) 903,60 ஈரோக்களில் இருந்து 919,86 ஈரோக்களாக சிறிய அளவு அதிகரிக்கப்படுகிறது.

இதேவேளை, ஈரோ நாணயப் புழக்கம் உள்ள ஐரோப்பிய நாடுகளில் பண வீக்
கம் அதிகரித்து வருகிறது. பிரான்ஸில்
ஏப்ரல் மாதத்தில் பண வீக்கம் 4.8 வீதத்
தால் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்
டிருக்கிறது.