இன்று இடம்பெற உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள மறுத்துள்ளார். அதையடுத்து ஊடகவியலாளர்கள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இம்முறைக்கான ஜனாதிபதி தேர்தலின் முதற்சுற்றுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் மிகுந்த பரப்பாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று ஏப்ரல் 5, செவ்வாய்க்கிழமை France 2 தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று இடம்பெற உள்ளது. “Elysée 2022" எனும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்ரோனின் இந்த அறிவிப்பை அடுத்து, பிரெஞ்சு ஊடகவியலாளர்கள் சங்கம் (Société des journalistes -SDJ) அதிருப்தி வெளியிட்டுள்ளது. “நாம் பலமுறை அழைப்பு விடுத்திருந்தோம். கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவற்றை நீங்கள் நிராகரித்துள்ளீர்கள். நாங்கள் வருகிந்துகிறோம். எங்கள் பார்வையாளர்களும் வருந்துகிறோம்!” என அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.