75 ஆண்டுகளின் பின்னர் ஏப்ரல் மாதம் ஒன்றில் அதிகூடிய குளிர் நிலவியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று, ஏப்ரல் 3, ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் 90% வீதமான இடங்களில் கடும் குளிர் நிலவியிருந்தது. அதிகபட்ச குளிராக Mourmelon நகரில் -9.3 °C) கடும் குளிர் நிலவியது. பிரான்சில் ஏப்ரல் மாதம் ஒன்றில் பதிவான மிக கடுமையான குளிர் இதுவாகும். கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்குப் பின்னர் (1947 ஆம் ஆண்டின் பின்னர்) பதிவாகும் அதிகபட்ச குளிர் இதுவாகும்.

அதேவேளை, இந்த கடும் குளிரினால் பழத்தோட்டங்கள் மற்றும் காய்கறித்தோட்டங்களில் பூக்கள் அரும்புவது பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.