Essonne மாவட்ட காவல்நிலையம் ஒன்றில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதேநகரில் வசிக்கும் குறித்த அதிகாரி, நேற்று திங்கட்கிழமை தனது வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Raphaël C. எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய அதிகாரியே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகாரியின் இந்த தற்கொலைக்கு தேசிய காவல்துறையினர் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் இடம்பெறும் 21 ஆவது காவல்துறை அதிகாரியின் தற்கொலை இதுவாகும். முன்னதாக சென்ற வாரத்தில் 60 வயதுடைய அதிகாரி ஒருவர் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.