இன்று ஏப்ரல் 22 அம் திகதி, வெள்ளிக்கிழமை Chelles, Seine-et-Marne நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை, இங்குள்ள Louis-Lumière உயர்கல்வி பாடசாலைக்குள் நுழைந்த ஒருவன்., அங்கு பயிலும் மாணவன் ஒருவனை தேடியுள்ளான். சில நிமிடங்களில் அவன் தேடிவந்த மாணவனை அடையாளம் கண்டுகொண்டதும், எதிர்பாராவிதமாக அவனை கத்தி ஒன்றினால் குத்தியுள்ளான்.

இச்சம்பவத்தினால் பாடசாலை மிகுந்த பரபரப்புக்குள்ளானது. காவல்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டனர்.

15 வயதுடைய கத்திக்குத்துக்கு இலக்கான மாணவன் படுகாயமடைந்த நிலையில், மருதுவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். ஐந்து தடவைகள் அவன் கத்தியால் குத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் அவனை தேடி வருகின்றனர்.

பாடசாலையில் உளநல சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன