ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தொலைக்காட்சியில் கருத்துச் சொன்ன ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Roanne (Loire) நகரில் வசிக்கும் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இங்கு வசிக்கும் நபர் ஒருவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது கருத்தினை தெரிவித்திருந்தார். முதலாம் சுற்று தேர்தலுக்கு முன்னதாக அவர் தேர்தல் தொடர்பான கருத்தினை வெளியிட்டிருந்தார். தொலைக்காட்சியில் அவரது கருத்து வெளியானதன் பின்னர், அவர் காவல்துறையினரால் தேடி கண்டுபிடிக்கப்பட்டு, ஏப்ரல் 20, புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவர் கைது செய்யப்பட்டமைக்கும், தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக, பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்புபட்ட அவர் நீண்ட நாட்களாக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் எனவும், தலைமறைவாகியிருந்த அவரை தொலைக்காட்சியில் அடையாளம் கண்டுகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் தொலைக்காட்சி நிலையத்தை தொடர்புகொண்டு விபரங்கள் சேகரித்து, அதனை அடிப்படையாக கொண்டு அவர் கைது செய்யபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது