தேர்தலில் ஐரோப்பியத் தலையீடா?
மூன்று ஜரோப்பிய நாடுகளின் தலைவர்
களது பெயரில் பத்திரிகை ஒன்றில்
வெளியாகியிருக்கின்ற கடிதம் ஒன்றில்
மக்ரோனுக்கு அவர்கள் தங்கள் ஆதரவை
வெளியிட்டுள்ளனர்.
ஒன்றிய நாடு ஒன்றின் உள்நாட்டு அரசி
யல் விவகாரமாக இருக்கின்ற தேர்தலில்
ஐரோப்பியத் தலைவர்கள் வேட்பாளர் ஒருவருக்கு வெளிப்படையாக ஆதரவு
தெரிவித்திருப்பது மிக அரிதான நிகழ்வு
என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
ஜேர்மனியின் அதிபர் ஒலாப் சோல்ஸ்,
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்
(Pedro Sanchez) போர்த்துக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்ரா(Antonio Costa)
ஆகியோரது பெயரில் பிரான்ஸின் "லூ மொன்ட்"(Le Monde) பத்திரிகையில் வெளியாகியிருக்கின்ற செய்தியில்-
பிரெஞ்சு வாக்காளர்கள் எதிர்கொள்ளும் தேர்தல் பிரான்ஸிற்கு மட்டுமல்ல, முழு ஐரோப்பாவிற்கும் முக்கியமானது என்று
தெரிவித்திருக்கிறார்கள்.
இது ஒரு "ஜனநாயக வேட்பாளர்" மற்றும் "நமது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை தாக்குபவர்களுக்கு வெளிப்படையாகப் பக்கபலமாக இருக்கும் தீவிர வலதுசாரி வேட்பாளர்" ஆகிய இருவருக்கு இடையே
யான தெரிவுப் போட்டி ஆகும் - என்று
மூன்று தலைவர்களும் கூட்டாகக் கருத்து
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை,
அதிபர் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும்
நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்
ளன. நேற்று நடைபெற்ற கடைசிப் பரப்
புரைக் கூட்டங்களில் இரு வேட்பாளர்க
ளும் ஒருவரை ஒருவர் கடுமையாகத்
தாக்கி கருத்துக்களை வெளியிட்டிருக்
கின்றனர்.