பிரான்சில் உள்ள நகரங்களில், வளர்ப்பு நாய் ஒன்றுடன் வசிக்க மிக பொருத்தமான அல்லது சிறந்த நகரம் எது எனும் புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மொத்தமாக 42 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் Ile-de-France மாகாணத்துக்குள் முதல் 10 இடங்களில் எந்த நகரங்களும் இடம்பிடிக்கவில்லை.

Boulogne-Billancourt நகரம் 11 ஆவது இடத்தில் உள்ளது. Montreuil 14 ஆவது இடத்திலும், Argenteuil மற்றும் St-Denis ஆகிய நகரங்கள் முறையே 39 மற்றும் 40 ஆவது இடங்களில் உள்ளன.

தலைநகர் பரிஸ் இந்த பட்டியலில் 24 ஆவது இடத்தில் உள்ளது.


*மேற்படி ஆய்வை 30 Millions d’amis பத்திரிகை மேற்கொண்டுள்ளது. 100,000 மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட நகரங்கள் மட்டுமே இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. மே மாத இதழில் இதன் முடிவுகள் வெளியிடப்பட உள்ளதால், இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள நகரங்களின் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சுற்றுச்சூழல், வளர்ப்பு நாய்களின் கழிவுகளை வெளியேற்றக்கூடிய வசதி போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த நகரங்கள் தரப்படுத்தப்பட்டுள்ளன.