நேற்று திங்கட்கிழமை இரவு Aulnay-sous-Bois நகரில் பலத்த வன்முறை இடம்பெற்றுள்ளது. பல வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.

வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகங்கள் மீது பெற்றோல் எரிகுண்டுகளை வீசி எரியூட்டினர். குப்பைத் தொட்டிகளை நடு வீதிக்கு இழுந்து வந்து எரியூட்டி வன்முறையில் ஈடுபட்டனர்.

சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடைந்தனர்.

காவல்துறையினரை பார்த்த வன்முறையாளர்கள், அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். அதிகாரிகள் மீதும் பெற்றோல் எரிகுண்டு வீசியுள்ளனர்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த நபர் ஒருவரை CRS அதிகாரிகள் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து சில நிமிடங்களில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே நேற்றைய இரவிலும் வன்முறை பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தின் முடிவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.