நெடுந்தூர தொடர்ந்து (TGV) ஒன்று புயலில் சிக்கி 7 மணிநேரம் தாமதமாக பரிசை வந்தடைந்துள்ளது.
Paris-Bordeaux நகரங்களிடையே பயணிக்கும் தொடருந்து ஒன்றே இவ்வாறு தாமதமாக வந்தடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடருந்து Bordeaux நகரில் இருந்து புறப்பட்டுள்ளது. Joué-lès-Tours, (Indre-et-Loire) நகரை தொடருந்து அண்மித்த போது, தண்டவாளத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் தொடருந்து அங்கேயே தரித்து நின்றது. SNCF இனால் பயணிகளுக்கு மாற்று வழி எதுவும் ஏற்படுத்திக்கொடுக்க முடியவில்லை. இதனால் தண்டவாளத்தில் மரத்தினை அகற்றியதன் பின்னரே பயணத்தை தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மீட்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாக 7 மணிநேரம் கழித்து தொடருந்து பரிசை வந்தடைந்தது. தொடருந்தில் 400 பயணிகள் வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.