பிரான்ஸில் மர்மமான முறையில் வாகனங்கள் கவிழ்ந்து விழுந்து இருப்பதாக கூறப்படுகின்ற சம்பவம் தென்மேற்கு பிரான்சில் பல பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.

வீட்டு வாசல்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அனைத்தும் கவிழ்ந்த நிலையிலேயே காணப்படுவதாக பலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

அங்கு இரவு உரிய முறையில் நிறுத்தப்படுகின்ற காரை காலை நேரம் பார்க்கும் போது வாகனம் கவிழ்ந்து கிடப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சனிக்கிழமை தனது வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த பின் ஒரு பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். வழக்கமாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருக்கும் அவரது கார் அன்றைய தினம் இடது பக்கமாக விழுந்து கிடந்து உள்ளது.

எனினும் இது புதிய விடயமல்ல என தெரிவித்த அந்த பெண் கடந்த சில வாரமாக பிரான்சில் பல நகரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். காரில் உள்ள convertor எனப்படும் பாகத்தை திருடுவதற்காக திருடர்கள் இவ்வாறு செய்ததாக கூறப்படும் அதேவேளை இந்தப் பாகம் வாகனத் துறையில் அதிகம் தேடப்படும் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை கருப்பு சந்தையில் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன