வீடொன்றில் இருந்து குழந்தை உட்பட மூவரது சடலங்கள் சிதைவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை காலை Amiens (Somme) நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இச்சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை மற்றும் இரு பெண்களின் (பெண்களில் ஒருவர் குறித்த குழந்தையின் தாய் என அறிய முடிகிறது) சடலங்களே மீட்கப்பட்டுள்ளது. ‘வன்முறை’ சம்பவத்தினால் அவர்கள் சில நாட்கள் முன்பு கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடல்கள் சிதைவடைந்து, துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உறவினர் ஒருவர் காவல்துறையினரை அழைத்து, குறித்த உறவினர்கள் குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்ததை அடுத்தே சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.

உடற்கூறு பரிசோதனைகளும், காவல்துறையினரின் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.